அது உண்மையல்ல... வதந்தி - ‘தர்மதுரை’ இரண்டாம் பாகம் குறித்து சீனு ராமசாமி விளக்கம்

தர்மதுரை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக, படத்தின் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் சமீபத்தில் அறிவித்திருந்தார்.;

Update:2021-10-19 22:09 IST
அது உண்மையல்ல... வதந்தி - ‘தர்மதுரை’ இரண்டாம் பாகம் குறித்து சீனு ராமசாமி விளக்கம்
சீனுராமசாமி இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியாகி வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக வரவேற்பை பெற்ற படம் ‘தர்மதுரை’. இதில் விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். தர்மதுரை படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய எந்த பக்கம் பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. ஆர்.கே.சுரேஷ் இப்படத்தை தயாரித்திருந்தார்.

இதனிடையே தர்மதுரை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் சமீபத்தில் அறிவித்திருந்தார். இதையடுத்து இப்படத்தை சீனுராமசாமி இயக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.

இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்து இயக்குனர் சீனு ராமசாமி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “தர்மதுரை பாகம் இரண்டு எடுக்கப் போவதாக செய்திகள் வருகின்றன. வாழ்த்துக்கள். ஆனால் அதை நான் இயக்குவதாக வரும் செய்திகள் உண்மையல்ல. ஆகவே அது சம்பந்தமான விசயத்தில் எனக்கு எவ்வித சம்பந்தம் இல்லை என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். விரைவில் என் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வரும்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்