நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் பிரபு தேவா படம்

நடன இயக்குனர், இயக்குனர், நடிகர் என தென்னிந்திய சினிமாவில் வலம் வரும் பிரபுதேவாவின் புதிய படம் ஒன்று நேரடியாக ஓட்டி தளத்தில் வெளியாகி இருக்கிறது.;

Update:2021-11-12 22:10 IST
நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் பிரபு தேவா படம்
பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பொன் மாணிக்கவேல்’. நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகி வரும் இதில் பிரபுதேவா முதல்முறையாக போலீசாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வந்தது. இப்படம் கடந்த வருடமே வெளியாக இருந்தது. இந்நிலையில், இப்படத்தை நேரடியாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்