நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் நிறைவு விழா நடத்த பிசிசிஐ திட்டம்..!
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.;
புதுடெல்லி,
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக ஐபிஎல் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நடத்தப்படவில்லை. இந்த நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் நிறைவு விழா நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
அதன்படி இந்த ஆண்டு வருகிற மே 29 அன்று இறுதிப்போட்டி நடைபெறும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நிறைவு விழாவை ரசிகர்கள் பார்க்கலாம் என்று பிசிசிஐ கூறியுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ தரப்பில், "இந்த ஆண்டு நிறைவு விழாவை நடத்துவதற்கான திட்டத்தில் பிசிசிஐ செயல்பட்டு வருகிறது. அகமதாபாத்தில் இறுதிப் போட்டிக்குப் பிறகு நிறைவு விழா நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். ஐபிஎல்லின் நிறத்தை மீண்டும் கொண்டு வர விரும்புகிறோம், எனவே நீங்கள் நிறைவு விழாவைக் காணலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2022 லீக் போட்டிகள் மராட்டியத்தின் மும்பை மற்றும் புனே நகரங்களில் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, பார்வையாளர்கள் குறைந்த அளவிலேயே மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். பிளே-ஆஃப் தேதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.