20 ஓவர் உலகக் கோப்பை: வங்காளதேச அணிக்கு அதிர்ச்சி கொடுத்த ஐசிசி

வங்காளதேச அணியின் கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.;

Update:2026-01-07 11:54 IST

டாக்கா,

வங்காளதேசத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அடித்துக் கொல்லப்பட்டதை அடுத்து, இந்தியாவில் கடும் எதிர்ப்பலைகள் எழுந்தன. இந்த எதிர்ப்புகளின் காரணமாக, வங்காளதேச வீரர் முஸ்தபிசூர் ரஹ்மானை ஐபிஎல்லில் விளையாட அனுமதிக்கக் கூடாது என்றும், மீறி போட்டி நடத்தப்பட்டால் ஆடுகளத்தை பெயர்த்தெடுப்போம் என்றும் சில ஆன்மிக தலைவர்கள் மிரட்டல் விடுத்தனர்.

மேலும், அரசியல் தலைவர்களிடமிருந்தும் பல்வேறு இடங்களில் இருந்து எதிர்ப்புகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, கொல்கத்தா அணியில் இருந்து முஸ்தபிசூர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டார். இதனால் கோபமடைந்த வங்காளதேச கிரிக்கெட் வாரியம், தங்கள் அணி விளையாடும் போட்டிகளை இந்தியாவில் நடத்தக் கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்தது.

ஆனால், வங்காளதேச அணியின் இந்த கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.வங்காளதேச அணிக்கு இந்தியாவில் எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்றும், போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்கு எந்த அடிப்படையும் இல்லை என்றும் கூறி, ஐசிசி அந்த கோரிக்கையை நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்