சென்னை மெட்ரோ, ரெயில்வே, பேருந்து வசதிக்கு நிதி ஒதுக்கீடு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

சென்னையில் ரூ.63 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ 2வது கட்ட திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Update: 2021-02-01 07:15 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில், நடப்பு 2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்து பேசி வருகிறார். இந்த பட்ஜெட் காகிதமில்லா பட்ஜெட் ஆகும். பட்ஜெட்டின் அங்கீகரிக்கப்பட்ட பிரதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, உடனே இணையத்தில் வெளியிடப்படுகிறது.

பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு டெல்லியில் மத்திய மந்திரிசபை கூட்டம் இன்று காலை நடந்தது.  இதில், நாடாளுமன்றத்தில் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வதற்கான ஒப்புதலை மத்திய மந்திரிசபை வழங்கியது.  இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி பட்ஜெட் தாக்கல் செய்து பேசி வருகிறார்.  அவர் பேசும்பொழுது,

* பொது போக்குவரத்து பேருந்து வசதிக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* ரெயில்வே துறைக்கு ரூ.1.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* ஜூன் 2022ம் ஆண்டுக்குள் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சரக்கு பாதை அமைக்கப்படும்.

* வருகிற 2023ம் ஆண்டு டிசம்பருக்குள் அனைத்து ரெயில் வழித்தடமும் மின்மயமாக்கப்படும்

* சென்னையில் ரூ.63 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ 2வது கட்ட திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்