பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை கொலை செய்த இளம்பெண் கைது

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை 50 வயது நபர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.;

Update:2026-01-02 11:40 IST

கோப்புப்படம் 

பண்டா,

உத்தரபிரதேச மாநிலத்தில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை கொலை செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். பண்டா மாவட்டம் முர்வால் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

நேற்று பிற்பகலில் சுக்ராஜ் பிரஜாபதி (50 வயது) என்பவரை 18 வயது இளம்பெண் ஒருவர் வெட்டி கொலை செய்து விட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர்.

இளம்பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் தனியாக வீட்டில் இருந்தபோது அந்த நபர் வீட்டிற்குள் நுழைந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அவரிடம் இருந்த தன்னை தற்காத்து கொள்வதற்காக இளம்பெண் வீட்டில் இருந்த பர்சா என்ற கோடரி வகை ஆயுதத்தால் அவரை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்