உத்தரகாண்ட்: 2 டோஸ் கொரோனா தடுப்பூசிக்கு பிறகும் 90% போலீசாருக்கு கொரோனா பாதிப்பு -அதிர்ச்சி தகவல்

உத்தரகாண்டில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு 90 சதவீத போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2021-06-03 06:15 GMT
டேராடூன்

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் வேகம் சற்று குறைந்து வருகிறது. கொரோனா பரவலின் 2வது அலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகள் காரணமாக நோய்த் தொற்றில் இருந்து குணமடைபவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது.

இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,34,154 பேருக்கு கொரோனா தொர்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நேற்றைய தினம் 2,11,499 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 

மேலும் கொரோனா பரிசோதனைகளையும் அதிக அளவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில்  2 ஆயிரத்திற்கும் ஆயிரம் போலீசார் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதில் அதிகப்படியான போலீசாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.   இவர்களில் 93 சதவீதம் பேர் நோய்த்தொற்று ஏற்படுவதற்கு முன்பு இரண்டு அளவு தடுப்பூசிகளையும் போட்டு கொண்டவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் 2,382 போலீசார் பணியில்  இருந்தபோது   சோதனையில் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர்களில், 2,204 பேர் குணமடைந்து உள்ளனர். ஐந்துபேர் உயிரிழந்து உள்ளனர்.இறந்த ஐந்து போலீஸ்காரர்களில் இருவருக்கு நாள்பட்ட நோய்கள் இருந்து உள்ளன.  மற்ற மூவருக்கும் தடுப்பூசி போடப்படவில்லை.

கொரோனா பரிசோத்னை மேற்கொண்ட போலீசாரின்  குடும்பங்களில் , 751 பேருக்கு நோய்த்தொற்றுகள் இருந்தன, இதில் 64 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றுநோயின் முதல் கட்டத்தில், 1,982 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானது மேலும் 8 பேர் இறந்தனர்.

புள்ளிவிவரங்கள் படி கடந்த ஆண்டு தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து இதுவரை 4,364 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர்களில் 13 பேர் இறந்துள்ளனர்.

இதுகுறித்து உத்தரகாண்ட்  டி.ஐ.ஜி (சட்டம் ஒழுங்கு) மற்றும் போலீஸ்  தலைமை செய்தித் தொடர்பாளர் நிலேஷ் ஆனந்த் பார்னே  கூறும் போது தொற்று தீவிரம் மற்றும் உயிரிழப்புகள் குறைவாகவே உள்ளன. தடுப்பூசி உற்பத்தியாளர்கள் கூட டோஸ் பெற்ற பிறகு  கொரோனா ஏற்படாது என தடுப்பூசி உத்தரவாதம் அளிக்கவில்லை. இறந்த சிலர் ஹரித்வாரில் உள்ள கும்பமேளாவில் பணியில் இருந்து உள்ளனர்.அவர்களின் இறப்புக்கும் கும்பமேளாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை  என்று பார்னே கூறினார்.

மேலும் செய்திகள்