ஜிதின் பிரசாதா இளைய சகோதரர் மாதிரி, பாஜகவுக்கு அவரை வரவேற்கிறேன் - ஜோதிராதித்ய சிந்தியா

காங்கிரசிலிருந்து பாஜகவில் இணைந்த ஜிதின் பிரசாதாவை வரவேற்று ஜோதிராதித்ய சிந்தியா வாழ்த்து தெரிவித்துள்ளார்.;

Update:2021-06-09 20:52 IST
ஜிதின் பிரசாதா இளைய சகோதரர் மாதிரி, பாஜகவுக்கு அவரை வரவேற்கிறேன் - ஜோதிராதித்ய சிந்தியா
புதுடெல்லி,

உத்தரபிரதேச சட்டசபை தேர்தல்  விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்களை தயார் படுத்தி வருகின்றன. இந்த நிலையில் உத்தரப்பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவரான ஜிதின் பிரசாதா டெல்லியில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் மத்திய மந்திரி பியூஷ் கோயல் முன்னிலையில் ஜிதின் பிரசாதா பா.ஜ.க வில் இணைந்தார். 

இதுபற்றி மாநிலங்களவை உறுப்பினர் ஜோதிராதித்ய சிந்தியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

"அவர் எனது இளைய சகோதரர் மாதிரி. பாஜகவுக்கு அவரை வரவேற்கிறேன். அவருக்கு எனது வாழ்த்துகளும்."

இதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சரவையில் அவருக்கான பொறுப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்து அவர் பேசுகையில், "பொதுச் சேவைதான் எனக்கு முதன்மையானது. அந்த சித்தாந்தத்தையே தொடர்கிறேன். எனது தந்தை மற்றும் தாத்தாவின் பாதையையே நானும் பின்பற்றுகிறேன். மக்களுக்கு சேவையாற்றுவதே சிந்தியா குடும்பத்தின் மரபு" என்றார்.

ஜோதிராதித்ய சிந்தியா கடந்தாண்டு காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்