பல்லாயிரம் கிலோமீட்டர் நீண்ட தூரத்திற்கு பறவைகள் எவ்வாறு இடம்பெயர்கின்றன? -விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல்

பல்லாயிரம் கீலோமீட்டர் நீண்ட தூரத்திற்கு பறவைகள் எவ்வாறு இடம்பெயர்கின்றன? என்பதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Update: 2021-06-24 10:39 GMT
புதுடெல்லி

இந்தியாவில் குளிர்காலம் தொடங்கியதும்  ​​உணவு மற்றும் கூடுகளைத் தேடி உலகம் முழுவதும் இருந்து 100 க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இந்திய துணைக் கண்டத்திற்கு வருகின்றன. இந்த  பறவைகள் ஆறுகள், பெருங்கடல்கள் மற்றும் மலைகள் வழியாக ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்  தூரம் பறந்துவருகின்ற. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் சரியான பாதை மற்றும் இடத்தை அந்த பறவைகள் அறிந்து கொள்கின்றன என்பது ஆச்சரியமாக இருக்கின்றது.

புதிய ஆராய்ச்சி ஒன்றில்  பூமியின் காந்தப்புலத்தை உணரும் திறன்  பறவைகளுக்கு  இருக்கிறது என்று கூறுகிறது. இது நீண்ட தூர பயணத்தில் அவைகளை வழிநடத்தும் திசைகாட்டியாக செயல்படுகிறது. பறவைகள் அவற்றின் விழித்திரைகளில் அமைந்துள்ள கிரிப்டோக்ரோம்கள் எனப்படும் காந்த உணர்திறன் வாய்ந்த புரதங்களைப் பயன்படுத்துகின்றன, அவை உணர்திறன் மற்றும் சமிக்ஞை செயல்பாடுகளை செயல்படுத்துகின்றன, இவைகள்  நீண்ட தூர பயணங்களுக்கு  உதவுகின்றன.

நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி கட்டுரை ஒன்றில்  புலம்பெயர்ந்த பறவைகள் வானிலையின் மாற்றத்தை எவ்வாறு உணர்கின்றன, எப்போது குடியேற வேண்டும், எந்த பாதையில் செல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றன என்பதை விளக்குகிறது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஜெர்மனியில் உள்ள ஓல்டன்பேர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ராபின்ஸ் என்ற பறவையை மூலம்  அவைகள்  நீண்ட தூரம் பயணம் செய்ய உதவும்  அதனுடைய காந்த உணர்திறனை ஆய்வு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்