ஆக்ஸிஜன் தட்டுப்பாடு: பச்சிளம் குழந்தை மூச்சுத்திணறி சாவு
ராஜஸ்தான் மாநிலம், பரத்பூர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை ஒன்று பிறந்தது.;
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம், பரத்பூர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த குழந்தையின் மேல் சிகிச்சைக்காக ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் டாக்டர்கள் அனுப்பி வைத்தனர்.
அப்போது ஆக்ஸிஜன் சிலிண்டர் திடீரென தீர்ந்ததால் பச்சிளம் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதில் தந்தை கண்முன்னேயே குழந்தை பரிதாபமாக இறந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.