ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பேர் ஆற்றில் மூழ்கினர் 9 பேர் மீட்பு; 6 பேர் மாயம்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பேர் ஆற்றில் மூழ்கினர் 9 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.6 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி நடக்கிறது;

Update:2021-07-09 18:08 IST
அயோத்தி

ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பேர் ஆக்ராவில் இருந்து உத்தரபிரதேசம்  அயோத்திக்கு வந்திருந்தனர். குப்தார் பகுதியில் சாரயு ஆற்றில்  அவர்களில் சிலர் குளிக்கும் போது ஆற்றில் தன்ணீர் அதிகம் சென்றதால் அடித்து செல்லப்பட்டனர் மற்றவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர் அவர்களும் மூழ்கினர்.  

 இதுவரை 9 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.காணாமல் போன மற்ற 6 பேரை  தேடும் பணியில்  உள்ளூர் போலீஸ்  மற்றும் உள்ளூர் தேடுதல் குழுவினர் ஈடுபட்டு  வருகின்றனர்.

மீட்கப்பட்ட 3 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். அவர்கள் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்