மாநிலங்களவையில் கடும் அமளியால் 3 வாரங்களில் 78 மணி நேரத்தில் 60 மணி நேரம் வீண்

மாநிலங்களவையில் 3 வாரங்களில் 78 மணி நேரத்தில் 60 மணி நேரம் அமளி காரணமாக வீணாகியுள்ளது.;

Update:2021-08-07 15:03 IST
மாநிலங்களவையில் கடும் அமளியால் 3 வாரங்களில் 78 மணி நேரத்தில் 60 மணி நேரம் வீண்
புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19 இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே அவையில் பெகாசஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், 14-வது நாள் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது முதலே பெகாசஸ் விவகாரத்தை விவாதிக்கக்கோரி இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அமளி நிலவுவதால், ஆகஸ்ட் 9-ம்தேதி காலை 11 மணிவரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில், மாநிலங்களவையில் 3 வாரங்களில் 78 மணி நேரத்தில் 60 மணி நேரம் அமளி காரணமாக வீணாகியுள்ளது என்றும்,  3-வது வாரத்தில் நிறைவேற்றபப்ட்டுள்ள 8 மசோதாக்கள் மீது 17 கட்சிகளின் 68 எம்பிக்கள் பேசி உள்ளனர் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்