நண்பரின் வீட்டுக்கு பார்ட்டிக்கு சென்ற இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்

நண்பரின் வீட்டுக்கு பார்ட்டிக்கு சென்ற இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.;

Update:2025-08-14 07:41 IST

புதுடெல்லி,

டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியை சேர்ந்த 24 வயதான இளம்பெண் ஒருவர், தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அவரது தோழி ஒருவர் கடந்த 10-ந் தேதி இளம்பெண்ணை மற்றொரு நண்பரின் வீட்டுக்கு பார்ட்டிக்காக அழைத்து சென்றார்.

அங்கு அந்த இளம்பெண்ணுக்கு மதுவில் போதைப்பொருள் கலந்து கொடுத்துள்ளனர். இதை குடித்ததால் அரை மயக்கத்தில் இருந்த இளம்பெண்ணை அங்கிருந்த ஆண்கள் சிலர் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் இது குறித்து வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து வீட்டிற்கு வந்த இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண்ணுக்கு போதைப்பொருள் கொடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தலைநகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்