வட இந்திய மாநிலங்களில் கனமழை: வெள்ள பாதிப்பால் மக்கள் அவதி

டெல்லியில் இன்றும் கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;

Update:2025-08-14 10:52 IST

புதுடெல்லி,

நாட்டின் தலைநகர் டெல்லி உள்பட வட இந்திய மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இமாசல பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கொட்டி தீர்த்த மழையால் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லியில் முக்கிய சாலைகளில் கூட முட்டளவுக்கு தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். டெல்லியில் இன்றும் கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தின் காசியாபாத் மற்றும் குருகிராமில் கனமழையால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வரும் 17 ஆம் தேதி வட இந்திய மாநிலங்களில் மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. உத்தர பிரதேசத்தின் வட மாவட்டங்களான பெய்ரேலி, லகிம்பூர், பிலிபட், ஷஜன்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்