திருமலையில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் தரிசனத்துக்கு வர வேண்டாம் - தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலையில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் தரிசனத்துக்கு வர வேண்டாம் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

Update: 2021-10-20 05:07 GMT
திருமலை,

திருமலையில் கொரோனா பரவலை தடுக்க முதியோர்,மாற்றுத் திறனாளிகள் மற்றும் குழந்தைகள், அவர்களது பெற்றோர்கள் கடந்த ஆண்டு மார்ச் 20-ந் தேதி முதல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.

இன்னும் முழுமையாக கொரோனா கட்டுப்படுத்தப்படாததால் அதே நிலை நீடிக்கிறது. ஆனால் கடந்த சிலநாட்களாக, திருமலையில உள்ள முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு சிறப்பு தரிசனங்கள் இருப்பதாக உண்மைக்கு மாறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. பலர் இதனை உண்மை என்று நம்பி வருவதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டி உள்ளது.

எனவே இந்த உண்மையை பக்தர்கள் உணர வேண்டும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. கொரோனா முழு அளவில் கட்டுப்படுத்தப்பட்டவுடன் வழக்கம்போல் அனைவரும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள.

அது குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படும் எனவே இப்போதைக்கு முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் வர வேண்டாம் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்