பாலைவன மணலில் அப்பளம் பொரிக்கும் ராணுவ வீரர்... வைரலாகும் வீடியோ

பாலைவன மணலில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் அப்பளம் பொரிக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.;

Update:2024-05-22 21:13 IST

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வாட்டி வதைக்கிறது. கடுமையான பாலைவன நிலப்பரப்பைக் கொண்ட ராஜஸ்தானில், கொதிக்கும் வெயிலில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கண்காணிப்பு பணிகளை செய்து வருகின்றனர்.

பொதுவாக கோடைக்காலங்களில் வெயிலின் தாக்கத்தை சுட்டிக்காட்டுவதற்காக மக்கள் சாலையில் ஆம்லெட் போடுவது போன்ற வீடியோக்களை வெளியிடுவது போல், பாலைவன பகுதிகளில் மணலில் அப்பளம் பொரிப்பது பொதுவான நிகழ்வாக இருக்கிறது.

Advertising
Advertising

அந்த வகையில் ராஜஸ்தானில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பாலைவன மணலில் அப்பளம் பொரிக்கும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது. இதனை பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, கடுமையான சூழலில் பணியாற்றி வரும் ராணுவ வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்