தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சந்திர திரிகோணமலை பகுதியை சுத்தப்படுத்திய கலெக்டர்

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சந்திர திரிகோணமலை பகுதியை கலெக்டர் சுத்தப்படுத்தினார். மேலும் இதில் பல அரசு அதிகாரிகளும் பங்கேறனர்.

Update: 2022-10-01 19:00 GMT

சிக்கமகளூரு;


சிக்கமகளூரு மாவட்டம் சந்திர திரிகோணமலை பகுதியில் உள்ள பாபாபுடன்கிரி, முல்லையன்கிரி, மாணிக்கதாரா அருவி, ஒன்னமண் அருவி உள்பட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த பகுதிகளுக்கு தினமும் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து குவிகின்றனர்.

அங்கு வரும் சுற்றுலா பயணிகள் பாலிதீன் பைகளையும், பிளாஸ்ட்டிக் பாட்டில்களையும் சாலைகளில் வீசி செல்கின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு பலகைகள் வைத்தும், மக்கள் அதனை பெரிதாக பொருட்படுத்தவில்லை.

இதனால் மாவட்ட நிர்வாகம் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுமார் 6 மாதத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்ய முன்வந்து மலைப்பகுதிக்கு தூய்மை பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரையும் அழைத்து சென்று அங்கு குவிந்துள்ள குப்பை கழிவுளை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று காலை மாவட்ட கலெக்டர் ரமேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த், மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி பிரபு, நகரசபை தலைவர் வேணுகோபால் மற்றும் நகரசபை கமிஷனர் பசவராஜ் ஆகியோர் தலைமையில் மலைப்பகுதிக்கு சென்று தூய்மை பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த குப்பைகளை 10-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் எடுத்து சென்று அங்கிருந்து சிக்கமகளூருவில் உள்ள இந்தாவரா கிராமத்திற்கு கொண்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்