இண்டிகோ நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை: விமான போக்குவரத்து துறை மந்திரி உறுதி
த்து செய்யப்பட்ட விமானங்களுக்கான டிக்கெட் தொகையை, நாளை மாலைக்குள் பயணிகளுக்கு திருப்பி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.;
புதுடெல்லி,
இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான சேவை நாடு முழுவதும் முடங்கியுள்ளது. இதனால் நாடு முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. எனவே கடந்த சில நாட்களாக பயணிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.இதுகுறித்து பேட்டியளித்த சிவில் விமானப் போக்குவரத்து மந்திரி ராம் மோகன் நாயுடு கூறியதாவது; “
இந்த பிரச்சினை தீர்க்கப்படும் தருவாயில் உள்ளது என்று நான் சொல்ல முடியும். டெல்லி, மும்பை, சென்னை போன்ற மெட்ரோ விமான நிலையங்களில் பெரும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆனாலும்கடந்த இரண்டு நாட்களாக இருந்த நிலைமை சீராகி வருகிறது. மற்ற விமான நிலையங்களிலும் இன்றிரவுக்குள் பிரச்சினை முடிக்கப்படும். மேலும் இண்டிகோ நாளை முதல் குறைந்த எண்ணிக்கையில் மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்க உள்ளது.
விமானிகள் மற்றும் கேபின் பணியாளர்கள் போதுமான ஓய்வு பெறுவதை உறுதி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட புதிய விதிமுறைகள் நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அப்படியானால், தவறு இண்டிகோவிடம்தான் உள்ளது இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது.
ஆனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இதனிடையே, ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான டிக்கெட் தொகையை, நாளை மாலைக்குள் பயணிகளுக்கு திருப்பி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளளது. டிக்கெட்டை கேன்சல் செய்யாமல் மாற்று நாட்களில் பயணிக்க விருப்பம் தெரிவிக்கும் பயணிகளுக்கு பயண தேதியை மாற்றியதற்காக தனி கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது” என்று தெரிவித்துள்ளது.