மங்களூரு; அரபிக்கடலில் ராட்சத அலையில் சிக்கி நேபாள சிறுமி சாவு

மங்களூருவில் அரபிக்கடலில் ராட்சத அலையில் சிக்கி நேபாள சிறுமி உயிரிழந்தாள். மேலும் 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Update: 2023-10-20 18:45 GMT

மங்களூரு-

மங்களூருவில் அரபிக்கடலில் ராட்சத அலையில் சிக்கி நேபாள சிறுமி உயிரிழந்தாள். மேலும் 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

நேபாளத்தை சேர்ந்தவர்

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா விட்டலா பகுதியில் வசித்து வந்தவர் நிஷா (வயது 16). ேநபாளத்தை சேர்ந்த இவர், தனது பெற்றோருடன் விட்டலாவில் தங்கி பள்ளியில் படித்து வந்தார். அவரது பெற்றோர் கூலி வேலை பார்த்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நிஷா, தனது நண்பர்களான நேபாளத்தை சேர்ந்த அஷ்மிதா (15) மற்றும் அதேப்பகுதியை சேர்ந்த திகந்த் (15), திவ்யராஜ் (15), தேஜாஸ் (14), கீர்த்தன் ஆகியோருடன் மங்களூரு அருகே சூரத்கல் அருகே உள்ள அரபிக்கடலுக்கு வந்துள்ளனர்.

கடலில் மூழ்கி சாவு

பின்னா் அவர்கள் அங்குள்ள அரபிக்கடலில் குளித்து கொண்டிருந்தனா். அப்போது, அரபிக்கடலில் ஏற்பட்ட ராட்சத அலையில் அவர்கள் 6 பேரும் சிக்கிக் கொண்டனர். இதனால் அவர்கள், தண்ணீரில் தத்தளித்தனர். இதனை பார்த்த அந்தப்பகுதியில் இருந்தவர்கள், மீனவர்கள் உதவியுடன் 5 பேரையும் காப்பாற்ற முயன்றனர்.

அவர்களில் நிஷா தவிர மற்ற 5 பேரை மீனவர்கள் பத்திரமாக மீட்டனர். ஆனால் நிஷா தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். மீட்கப்பட்ட 5 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸ் விசாரணை

இதுபற்றி அறிந்ததும் சூரத்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னா் போலீசார் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த நிஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சூரத்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்