சிறுவனின் கழுத்தில் வளர்ந்த 2½ கிலோ கட்டி அகற்றம்; மாநகராட்சி ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை

சிறுவனின் கழுத்தில் வளர்ந்த 2½ கிலோ கட்டியை அகற்றி மும்பை மாநகராட்சி ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை படைத்து உள்ளனர்.

Update: 2023-10-09 18:45 GMT

மும்பை, 

சிறுவனின் கழுத்தில் வளர்ந்த 2½ கிலோ கட்டியை அகற்றி மும்பை மாநகராட்சி ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை படைத்து உள்ளனர்.

சிறுவன் கழுத்தில் கட்டி

மும்பை சயான் மாநகராட்சி ஆஸ்பத்திரிக்கு கடந்த செப்டம்பர் மாதம் 25-ந் தேதி 15 வயது சிறுவன் சிகிச்சைக்கு வந்தான். அவனது கழுத்தில் பெரிய கட்டி இருந்தது. சிறுவன் பிறந்தது முதல் அவனது கழுத்தில் கட்டி இருப்பதாக பெற்றோர் கூறினர். இந்த கட்டி சிறுவனுக்கு உடல்நலத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், அந்த தோற்றம் சிறுவனுக்கு தன்னம்பிக்கை இன்மையை அளித்து வந்தது.

அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

இதையடுத்து டாக்டர்கள் சிறுவனின் கழுத்தில் வளர்ந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்தனர். இதய நிபுணர், ரேடியாலஜி உள்ளிட்ட சிறப்பு டாக்டர்கள் அடங்கிய குழுவினர் சுமார் 6½ மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து சிறுவனின் கழுத்தில் இருந்த 2½ கிலோ கட்டியை வெற்றிகரமாக அகற்றினர். இது குறித்து ஆஸ்பத்திரி டீன் மோகன் ஜோஷி கூறுகையில், "அறுவை சிகிச்சைக்கு பிறகு தோளில் இருந்த மிகப்பெரிய பாரத்தை இறக்கி வைத்தது போல சிறுவனுக்கு இருக்கும். கட்டியை அகற்றாமல் இருந்து இருந்தால் அது அவனின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கி இருக்கும். தற்போது சிறுவன் உடல்நலம் தேறி வருகிறான்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்