சுங்கச்சாவடி ஊழியர்களை தாக்கி ரூ.33 லட்சம் பணம் பறித்த 4 பேருக்கு கடுங்காவல்

சுங்கச்சாவடி ஊழியர்களை தாக்கி ரூ.33 லட்சம் பறித்த 4 பேருக்கு கடுங்காவல் தண்டனை விதித்து தானே கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-09-30 20:00 GMT

தானே, 

சுங்கச்சாவடி ஊழியர்களை தாக்கி ரூ.33 லட்சம் பறித்த 4 பேருக்கு கடுங்காவல் தண்டனை விதித்து தானே கோர்ட்டு உத்தரவிட்டது.

பணம் பறிப்பு

தானே மாவட்டம் பிவண்டியில் உள்ள மலோடி சுங்கச்சாவடியில் வசூலான ரூ.33 லட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்ய சுங்கச்சாவடி ஊழியர்கள் 2 பேர் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 12-ந்தேதி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தனர். அப்போது 2 வாகனத்தில் வந்த கும்பல் அந்த ஊழியர்களை தாக்கினர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அவர்கள் வைத்திருந்த பணப்பையை பறித்து விட்டு தப்பி சென்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கடுங்காவல்

இதில் ஊழியர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் ரவி பிரஜாபதி (வயது27), கல்பேஷ் வர்மா (27), முகமது சமீர் (38), ராஜூ பிரசாத் (32) ஆகிய 4 பேர் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். இவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கின் இறுதி கட்ட விசாரணையின் போது அவர்கள் மீதான குற்றம் நிரூபணமானது. இதனை தொடர்ந்து 4 பேருக்கும் தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் சம்பவத்திற்கு மூளையாக ராஜூ பிரசாத் செயல்பட்டதால் அவருக்கு மேலும் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்