உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி போராட்டம்- பா.ஜனதா தலைவர் உள்பட 40 பேர் கைது

உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி போராட்டம் நடத்திய பா.ஜனதா தலைவர் உள்பட 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-05-25 14:16 GMT

மும்பை, 

உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி போராட்டம் நடத்திய பா.ஜனதா தலைவர் உள்பட 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

இடஒதுக்கீடு

மராட்டியத்தில் உள்ளாட்சி தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி) 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த இடஒதுக்கீட்டை சுப்ரீம் கோர்ட்டு இந்த ஆண்டு தொடக்கத்தில் ரத்து செய்தது.

இதுகுறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த இடஒதுக்கீட்டை மீட்டெடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியான பா.ஜனதா தொடர்ந்து வலியறுத்தி வருகிறது.

போராட்டம்

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க கோரி பா.ஜனதாவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் உள்பட 250 பேர் தென் மும்பையில் உள்ள மராட்டிய தலைமை செயலகமான மந்திராலயா அருகே உள்ள கட்சி அலுவலகத்திற்கு வெளியே இன்று காலை 11.30 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அங்கிருந்து மந்திராலயா நோக்கி பேரணியாக செல்ல முயற்சி செய்தனர். அப்போது போலீசார் இடைமறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், முன்னாள் மந்திரி சுதிர் முங்கண்டிவார் உள்பட 40 பேரை கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். அவர்கள் அனைவரும் ஆசாத் மைதானத்திற்கு அழைத்து சென்று தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்