ரூ.40 லட்சம் போதை பொருளுடன் 6 பேர் கைது
மும்பையில் ரூ.40 லட்சம் போதை பொருளுடன் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.;
மும்பை,
மும்பையில் ரூ.40 லட்சம் போதை பொருளுடன் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரகசிய தகவல்
மும்பை மஜித் பந்தர், குர்லா தெரு பகுதிக்கு ஒருவர் போதை பொருளுடன் வர உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் போலீசார் 90 கிராம் போதை பொருளுடன் ஒருவரை பிடித்தனர்.
6 பேர் கைது
அவா் கொடுத்த தகவலின் பேரில் செம்பூர், மஜித்பந்தர், சிவ்ரி, கோவண்டி பகுதிகளில் மேலும் 5 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.40.8 லட்சம் மதிப்பிலான 204 கிராம் எம்.டி. போதை பொருள், ரூ.15 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிடிபட்ட 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இந்த ஆண்டில் இதுவரை 15 வௌிநாட்டினர் உள்பட 149 பேரை கைதுசெய்து உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.30 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.