தனியார் நிறுவனத்தில் ரூ.75 லட்சம் கொள்ளையடித்த ஊழியர் உள்பட 7 பேர் கைது

தனியார் நிறுவனத்தில் ரூ.75 லட்சத்தை கொள்ளையடித்த ஊழியர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2023-09-04 20:00 GMT

மும்பை, 

மும்பையில் செயல்படும் ஒரு தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் 2 பேர் சம்பவத்தன்று ரூ.75 லட்சம் பணத்துடன் மலாடு பகுதியில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் கத்தி முனையில் மிரட்டி ஊழியர்களிடம் இருந்த பணத்தை பறித்து சென்றனர். சம்பவம் குறித்து தனியார் நிறுவனம் சார்பில் மலாடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் நிறுவன ஊழியர் பிரதிக் (30) உள்பட 7 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் லோனாவாலா, புனே, நாசிக், ஜல்னா உள்ளிட்ட பகுதிகளில் பதுங்கி இருந்த 7 பேரையும் கைது செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட பணத்திலும் ஒரு பகுதியை மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்