'ராக்கிங்' செய்த 9 மாணவர்கள் இடைநீக்கம்

மருத்துவ கல்லூரி விடுதியில் முதலாம் ஆண்டு மாணவரை ராக்கிங் செய்த 9 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2023-10-05 18:45 GMT

தானே, 

மருத்துவ கல்லூரி விடுதியில் முதலாம் ஆண்டு மாணவரை ராக்கிங் செய்த 9 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கல்லூரி விடுதியில் ராக்கிங்

தானே, கல்வா பகுதியில் மாநகராட்சி நடத்தும் ராஜீவ் காந்தி மருத்துவ கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி மாணவர் விடுதி மான்பாடாவில் உள்ளது. இங்கு கடந்த மாதம் மாணவர்கள் சிலர் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவனை ராக்கிங் செய்து உள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவர் டெல்லியில் உள்ள பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு இ-மெயில் மூலம் புகார் அளித்தார். இதை தொடர்ந்து புகார் குறித்து விசாரணை நடத்த மருத்துவ கல்லூரி டீன் குழு ஒன்றை அமைத்தார். குழு நடத்திய விசாரணையில் மாணவர் ராக்கிங் செய்யப்பட்ட சம்பவம் வீடியோ ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது.

9 மாணவர்கள் இடைநீக்கம்

இதைத்தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவரை ராக்கிங் செய்த 9 மாணவர்கள் ஒரு செமஸ்டருக்கு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் கல்லூரி விடுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை தானே மாநகராட்சி உறுதிப்படுத்தி உள்ளது.

சம்பவம் குறித்து விசாரணை நடத்திய டாக்டர் ராகேஷ் பரோட் கூறுகையில், "இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறக்கூடாது. கல்லூரியால் அமைக்கப்பட்ட கமிட்டியை சேர்ந்தவர் வாரம் ஒருமுறை விடுதியை பார்வையிடுவார். அங்கு எல்லாம் சரியாக நடக்கிறதா என்பதை அவர் ஆய்வு செய்வார். விடுதி வார்டனும் மாணவர்களுடன் இணைந்து செயல்படுவார். ராக்கிங் போன்ற சம்பவங்கள் நடக்கிறதா என்பது குறித்து அவர் அடிக்கடி மாணவர்களிடம் விசாாிப்பார்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்