லஞ்ச ஒழிப்பு போலீசார் போல் நாடகமாடி ரூ.35 லட்சம் பறித்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

லஞ்ச ஒழிப்பு போலீசார் போல் நாடகமாடி ரூ.35 லட்சம் பறித்த வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்

Update: 2023-10-25 19:00 GMT

மும்பை, 

நவிமும்பை ஐரோலி பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஒருவரின் வீட்டிற்கு கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி 6 பேர் கொண்ட கும்பலினர் புகுந்தனர். ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் என அவர்கள் தெரிவித்தனர். மேலும் சோதனை நடத்த வந்திருப்பதாக கூறி வீட்டில் பீரோ மற்றும் அறைகளில் சோதனை போட்டனர். அங்கிருந்த ரூ.34 லட்சத்து 85 ஆயிரம் மதிப்புள்ள ரொக்கம், நகைகளை எடுத்து கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு அதிகாரியின் மனைவியை கொன்று விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். பாதிக்கப்பட்ட பெண் சம்பவம் குறித்து ராபாலே போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த பணம் பறிப்பு வழக்கில் 11 பேர் கும்பலை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் முக்கிய குற்றவாளியான அமித்வாரிக்(வயது35) என்பவர் தலைமறைவானது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை போலீசார் வலைவீசி தேடிவந்தனர். இந்தநிலையில் அவர் பால்கர் மாவட்டம் விராரில் சந்தன்சர் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை பிடித்து கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்