சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ.வின் ரூ.152 கோடி சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கு சொந்தமான ரூ.152 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

Update: 2023-10-13 18:45 GMT

மும்பை, 

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கு சொந்தமான ரூ.152 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

ரூ.560 கோடி முறைகேடு

நவிமும்பையில் பன்வெல் தொகுதியில் 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் விவேக் பாட்டீல் என்ற விவேகானந்த் சங்கர் பாட்டீல். உழவர் உழைப்பாளா் கட்சியை சேர்ந்த இவர், கர்னாலா நகரி சகாகாரி வங்கியின் சேர்மனாகவும் இருந்து உள்ளார். இவர் ரூ.560 கோடி வங்கி கடன் முறைகேட்டில் ஈடுபட்டது கடந்த 2019-ம் ஆண்டு வெளிச்சத்துக்கு வந்தது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனா். அந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் விேவக் பாட்டீல் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்ந்தனர்.

ரூ.152 கோடி சொத்துக்கள் முடக்கம்

மேலும் 2021-ம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்தநிலையில் அமலாக்கத்துறையினர் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக விவேக் பாட்டீல் மற்றும் அவரது உறவினர்களின் ரூ.152 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்