ஊர்க்காவல் படை முன்னாள் வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

காட்கோபரில் ஊர்க்காவல் படை முன்னாள் வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.;

Update:2022-06-22 23:32 IST

மும்பை, 

மும்பை காட்கோபர் எம்.ஜி ரோடு கைலாஷ் சொசைட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் சங்வி (வயது87). முன்னாள் ஊர்க்காவல் படை வீரர். இன்று காலை நடைபயிற்சிக்கு செல்வதாக கூறி சென்றார். இந்த நிலையில் கட்டிட வளாகத்தில் சென்ற போது திடீரென அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு சுருண்டு விழுந்தார். இந்த நிலையில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அங்குவந்த அக்கம், பக்கத்தினர் ரமேஷ் சங்கி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் அங்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவர் வைத்திருந்த கடிதம் ஒன்று சிக்கியது. இந்த கடிதத்தில் நோயின் காரணமாக மன உளைச்சல் அடைந்ததால் தற்கொலை செய்துகொள்ளும் விபரீத முடிவை எடுத்ததாக ரமேஷ் சங்வி குறிப்பிட்டு இருந்தார்.

இது பற்றி அவரது மகன் கவுரங், "தனது தந்தை நீரழிவு மற்றும் குடலிறக்கம் போன்ற நோயினால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், நீண்டகாலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் மனமுடைந்து காணப்பட்டு வந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்தார். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்