போலி கால்சென்டர் நடத்தி அமெரிக்காவை சேர்ந்தவர்களிடம் மோசடி; 23 பேர் மீது வழக்குப்பதிவு

நவிமும்பையில் போலி கால்சென்டர் நடத்தி அமெரிக்காவை சேர்ந்தவர்களிடம் மோசடியில் ஈடுபட்ட 23 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Update: 2023-10-22 19:30 GMT

மும்பை, 

நவிமும்பையில் போலி கால்சென்டர் நடத்தி அமெரிக்காவை சேர்ந்தவர்களிடம் மோசடியில் ஈடுபட்ட 23 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

போலி கால்சென்டர்

நவிமும்பை வாஷி பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் போலி கால்சென்டர் செயல்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் படி வணிக வளாகத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு போலி கால்சென்டர் செயல்பட்டு வருவது உறுதியானது.

அமெரிக்கர்களிடம் மோசடி

போலீசார் நடத்திய விசாரணையில் போலி கால்சென்டர் கும்பல் அமெரிக்காவை சேர்ந்தவர்களை தொடர்பு கொண்டு வயாகரா, சியாலிஸ் போன்ற மருந்துகளை விற்பனை செய்வதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கால்சென்டரில் இருந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான எலெக்ட்ரிக் சாதனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் மோசடி குறித்து போலி கால்சென்டர் உரிமையாளர், மேலாளர் உள்பட 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்