தங்கம் விலையில் புதிய உச்சம்- ஒரேநாளில் பவுன் ரூ.400 அதிகரிப்பு

மும்பையில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. கிராம் தங்கம் ரூ.5,095-க்கு நேற்று விற்பனை ஆனது.;

Update:2023-01-04 00:15 IST

மும்பை, 

மும்பையில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. கிராம் தங்கம் ரூ.5,095-க்கு நேற்று விற்பனை ஆனது.

கிராமுக்கு ரூ.50 உயர்வு

மும்பையில் நேற்று முன்தினம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்தது. கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 45-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டினர்.

இந்தநிலையில் நேற்று தங்கத்தின் விலை 2 ஆண்டுகளில் இல்லாத அளவு புதிய உச்சத்தை தொட்டது. நேற்று ஒரே நாளில் கிராம் தங்கத்தின் விலை ரூ.50 அதிகரித்தது. நேற்று முன்தினம் ரூ.5 ஆயிரத்து 45-க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம், நேற்று ரூ.5 ஆயிரத்து 95-க்கு விற்பனை ஆனது.

ஒரு பவுன் தங்கம் ரூ.400 அதிகரித்து ரூ.40 ஆயிரத்து 760-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.40 ஆயிரத்து 360 ஆக இருந்தது.

வெள்ளி விலை

தங்கத்தை போல வெள்ளியின் விலையும் உயர்ந்து உள்ளது. நேற்று முன்தினம் ரூ.71.30-க்கு விற்பனையான ஒரு கிராம் வெள்ளி நேற்று 70 பைசா அதிகரித்து ரூ.72-க்கு விற்பனை ஆனது.

10 கிராம் வெள்ளி ரூ.7 அதிகரித்து ரூ.576-க்கு விற்பனை செய்யப்பட்டது.

----

Tags:    

மேலும் செய்திகள்