பொய் பாலியல் புகாரால் ஜெயிலில் அடைக்கப்பட்டவர் 7 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை

வளர்ப்பு மகள் அளித்த பொய் பாலியல் புகாரால் ஜெயிலில் அடைக்கப்பட்டவர் 7 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார்.;

Update:2022-07-03 23:29 IST

மும்பை, 

வளர்ப்பு மகள் அளித்த பொய் பாலியல் புகாரால் ஜெயிலில் அடைக்கப்பட்டவர் 7 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார்.

கற்பழிப்பு வழக்கில் கைது

டோம்பிவிலியை சேர்ந்தவர் விபுல் நார்கர்(வயது34). இவர் கடந்த 2014-ம் ஆண்டு விவாகரத்தான பெண்ணை திருமணம் செய்தார். மேலும் பெண்ணின் 15 வயது மகள், 13 வயது மகனும் அவருடன் டோம்பிவிலி வீட்டில் தங்கினர்.

இந்தநிலையில் 2015-ம் ஆண்டு விபுல் நார்கரின் வளர்ப்பு மகள் தற்கொலைக்கு முயற்சி செய்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் போலீசாரிடம் விபுல் நார்கர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினார். இதையடுத்து போலீசார் வளர்ப்பு மகளை கற்பழித்ததாக அவரை கைது செய்தனர்.

7 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை

இந்தநிலையில் சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு விபுல் நார்கர் குற்றமற்றவர் என கல்யாண் சென்ஸ் கோர்ட்டு விடுவித்து உள்ளது. இது குறித்து கோர்ட்டில் நடந்த விசாரணையில் தெரியவந்ததாவது:-

விபுல் நார்கரின் வளர்ப்பு மகள் வாலிபர் ஒருவரை காதலித்து உள்ளார். விபுல் நார்கர் வளர்ப்பு மகளை அந்த வாலிபருடன் 2 முறை பார்த்து இருக்கிறார். எனவே அவர் வளர்ப்பு மகளை கண்டித்தார். இதையடுத்து அவர் டி.வி.யில் ஒளிப்பரப்பாகிய கிரைம் நிகழ்ச்சியை போல வளர்ப்பு தந்தையை போலீசில் சிக்கவைக்க முடிவு செய்தார். பின்னர் அவர் தற்கொலை முயற்சி நாடகமாடி வளர்ப்பு தந்தை விபுல் நார்கரை பாலியல் வழக்கில் போலீசில் சிக்க வைத்தது தெரியவந்தது.

இதில் மருத்துவ சோதனை, வக்கீலின் குறுக்கு விசாரணை காரணமாக விபுல் சர்மா குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டது. எனினும் அவர் செய்யாத குற்றத்திற்காக 7 ஆண்டுகள் ஜெயிலில் இருந்து உள்ளார். மேலும் மனைவியும், வளர்ப்பு மகளும் ஜெயிலில் இருந்த நேரத்தில் விபுல் நார்கருக்கு தெரியாமல் அவரது வீட்டை விற்றுவிட்டு சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். இதன் காரணமாக தற்போது அவர் எதுவுமில்லாமல் இருப்பதாக அவருக்காக வாதாடிய வக்கீல் கணேஷ் கோலப் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்