ஷீனா போரா கொலை வழக்கு: 'எனது தந்தை அப்பாவி' என கோர்ட்டில் ராகுல் முகர்ஜி வாக்குமூலம்

ஷீனா போரா கொலை வழக்கில், எனது தந்தை அப்பாவி என கோர்ட்டில் ராகுல் முகர்ஜி கூறியுள்ளார்.;

Update:2022-11-19 00:15 IST

மும்பை, 

ஷீனா போரா கொலை வழக்கில், எனது தந்தை அப்பாவி என கோர்ட்டில் ராகுல் முகர்ஜி கூறியுள்ளார்.

ஷீனா போரா கொலை

மும்பையை சேர்ந்த பிரபல டி.வி. சேனல் முன்னாள் நிர்வாகி இந்திராணி முகர்ஜி, அவரது மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கடந்த 2015-ல் கைது செய்யப்பட்டார். இதே வழக்கில் இந்திராணியின் முன்னாள் கணவர் பீட்டர் முகர்ஜி, சஞ்சீவ் கண்ணர், ஷியாம்வர் ராவ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

தற்போது அனைவரும் ஜாமீனில் வெளியே உள்ளனர். பீட்டர் முகர்ஜியின் மகன் ராகுல் முகர்ஜியை, ஷீனா போரா காதலித்ததால் அவரை இந்திராணி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

எனது தந்தை அப்பாவி

இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை சிறப்பு கோர்ட்டில் நடந்தது. அப்போது வழக்கின் சாட்சியான பீட்டர் முகர்ஜியின் மகன் ராகுல் முகர்ஜியிடம் இந்திராணியின் வக்கீல் ரஞ்சித் சாங்லே குறுக்கு விசாரணை செய்தார். அப்போது ராகுல் முகர்ஜி, "எனது தந்தை (பீட்டர் முகர்ஜி) அப்பாவி. இது தொடர்பாக அவர் ஜனாதிபதி, பிரதமருக்கு கடிதம் எழுதியது உண்மைதான். எனது தந்தை அப்பாவி என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன். நான் எனது தந்தையை இப்போதும் நேசிக்கிறேன்" என்றார்.


Tags:    

மேலும் செய்திகள்