குர்லாவில் சுவர் இடிந்து விழுந்ததில் இளம்பெண் பலி
குர்லாவில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் இளம்பெண் பலியானார்;
மும்பை,
மும்பை குர்லா சுபாஷ்நகர் பகுதியில் உள்ள குடிசைப்பகுதியில் வசித்து வரும் இளம்பெண் வைஷ்ணவி (வயது18). நேற்று காலை 7.50 மணி அளவில் இவரது வீட்டருகே உள்ள ஜெயின் சதான் என்ற கட்டிடத்தின் காம்பவுண்ட் சுவர் திடீரென இடிந்து அருகே இருந்த 2 குடிசை வீட்டின் மீது விழுந்தது. இதனால் குடிசை வீட்டின் மீது போடப்பட்டு இருந்த ஷீட்டுகள் உடைந்து அங்கு தங்கி இருந்த இளம்பெண்ணின் மீது விழுந்தது. இந்த விபத்தில் அவர் படுகாயமடைந்ததால் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பாந்திராவில் உள்ள பாபா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இளம்பெண் பலியானார். இதுகுறித்து போலீசார் விபத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண்ணுடன் தங்கியிருந்த குடும்ப உறுப்பினர்கள் 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.