உலக கோப்பை கிரிக்கெட்: ஆன்லைனில் சூதாடி கோடீஸ்வரர் ஆன போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் - பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்

உலக கோப்பை கிரிக்கெட் தொடர்பாக ஆன்லைனில் சூதாடி கோடீஸ்வரர் ஆன போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2023-10-18 19:15 GMT

புனே, 

உலக கோப்பை கிரிக்கெட் தொடர்பாக ஆன்லைனில் சூதாடி கோடீஸ்வரர் ஆன போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

கோடீஸ்வரர் ஆன சப்-இன்ஸ்பெக்டர்

புனேயை அடுத்த பிம்பிரி சிஞ்ச்வாட்டில் உள்ள போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சோம்நாத். இவர் நடைபெற்று வரும் உலககோப்பை கிரிக்கெட் போட்டிக்காக ஆன்லைனில் சூதாடி வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.1 கோடியே 50 லட்சம் பரிசு கிடைத்தது. இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைத்தனர். இதற்கிடையே பரிசு வென்ற சப்-இன்ஸ்பெக்டர் சோம்நாத் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து உள்ளார். இந்த வீடியோ சமுக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.

பணி இடைநீக்கம்

இதுபற்றி பிம்பிரி சிஞ்ச்வாட் துணை போலீஸ் கமிஷனர் சுவப்னா கோர் விசாரணை நடத்தினார். இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அந்த பரிந்துரையின்பேரில் போலீஸ் கமிஷனர் வினய் குமார் சவுபே, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சோம்நாத்தை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் இலாகாப்பூர்வ விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்