வானவில் : உஷா எலெக்ட்ரிக் ரைஸ் குக்கர்
சமையலை எளிமையாக்கும் பல தொழில்நுட்ப கண்டு பிடிப்புகள் வந்து கொண்டேயிருக்கின்றன. வேலைக்குச் செல்லும் மகளிரின் சமையலறை பளுவைக் குறைக்க வந்துள்ள கருவிகளில் ஒன்றுதான் ரைஸ் குக்கர்.;
வழக்கமான நீராவி குக்கரை விட இப்போது மின்சாரத்தில் இயங்கும் குக்கர்களும் நவீன சமையலறை சாதனங்களுள் ஒன்றாகி வருகிறது.
உஷா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ரைஸ் குக்கர் 5 லிட்டர் அளவில் வந்துள்ளது. இதில் பாதுகாப்பு அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் ஆனது.
ஒன் பாட் குக்கிங் எனப்படும் ஒரே தடவையில் செய்யப்படும் பிரியாணி, பிரைட் ரைஸ் போன்ற சுவை மிகு உணவுகளை சமைக்க ஏற்றது.
வழக்கமான குக்கரில் இருப்பது போன்ற விசில் இதில் கிடையாது. இதனால் சுமைக்கும் உணவின் சத்துகள் வெளியேறாது. இதில் 10 வகையான பாதுகாப்பு அம்சங்கள் பின்பற்றப்பட்டுள்ளன.
சமையல் செய்யும்போது மின்சாரம் தடைப்பட்டாலோ மீண்டும் மின்சாரம் வந்தவுடன் செயல்படத் தொடங்கும். முன்பு தேர்வு செய்யப்பட்ட அதே நிலையை இது தொடரும். இதில் சமைக்கப்பட்ட உணவு 6 மணி நேரம் வரை சூடாக இருக்கும். இதனால் உணவுப் பொருளை மீண்டும் மீண்டும் சுட வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் உணவின் சத்து வீணாகாது.
சாதம், கறி, பருப்பு, சூப், சாம்பார், ராஜ்மா, பாஸ்டா, சிக்கன், மட்டன் உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருளையும் சமைக்கலாம். இதைக் கையாள்வது மிகவும் எளிது. தொடக்கத்தில் இதன் விலை ரூ. 6,245. இப்போது தள்ளுபடி விலையில் ரூ.5,450-க்கு அமேசான் ஆன்லைனில் கிடைக்கிறது.