எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு வேலை : 400 பணியிடங்கள்

இந்திய எலக்ட்ரானிக்ஸ் கழக நிறுவனம் சுருக்கமாக ஈசில் (ECIL) என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் ஜூனியர் டெக்னிக்கல் ஆபீசர், ஜூனியர் கன்சல்டன்ட் போன்ற பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

Update: 2018-11-05 04:15 GMT
மொத்தம் 400 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் ஜூனியர் டெக்னிக்கல் ஆபீசர் பணிக்கு 210 இடங்களும், ஜூனியர் கன்சல்டன்ட் பணிகளுக்கு 190 இடங்களும் உள்ளன.

ஜூனியர் டெக்னிக்கல் ஆபீசர் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 30-9-2018-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், ஜூனியர் கன்சல்டன்ட் பணி விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கும் மாற்றுத்திறனாளி களுக்கும் வயது வரம்பில் தளர்வு பின்பற்றப்படுகிறது.

என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்கள் ஜூனியர் டெக்னிக்கல் ஆபீசர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பணி அனுபவம் அவசியம். தேவையான பிரிவுகளில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் ஜூனியர் கன்சல்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

நேர்காணல் அடிப்படையில் ஜூனியர் டெக்னிக்கல் ஆபீசர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. எழுத்துத் தேர்வின் மூலம் ஜூனியர் கன்சல்டன்ட் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, புதுடெல்லி போன்ற இடங்களில் நேர்காணல் நடக்கிறது. நவம்பர் 6-ந்தேதி முதல் 10-ந் தேதி வரை இதற்கான நேர்காணல்- தேர்வு நடக்கிறது. எந்த நாளில் எந்த இடத்தில் நேர்காணல்- தேர்வு நடக்கிறது என்பதை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

விருப்பமுள்ளவர்கள் இணையதளத்தில் இருந்து குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி எடுத்துச் செல்ல வேண்டும். அத்துடன் தேவையான சான்றுகளை எடுத்துச் சென்று நேர்காணலில் பங்கேற்கலாம். இது பற்றிய விவரங்களை www.ecil.co.in. என்ற இணையதளத்தில் பார்க்கலாம். 

மேலும் செய்திகள்