கப்பல் தளத்தில் 1980 பணியிடங்கள்

கப்பல் தளத்தில் 1980 வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:;

Update:2019-08-27 15:54 IST
பொதுத்துறை கப்பல் தளங்களில் ஒன்று மசாகான்டாக் ஷிப்பில்டர்ஸ் லிமிடெட். மும்பையில் செயல்படும் இந்த கப்பல் தளத்தில் தற்போது நான்எக்சிகியூட்டிவ் தரத்திலான அலுவலக பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 1980 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

பிட்டர், கார்பெண்டர், மெக்கானிக், அட்டன்ட், கிரேன் ஆபரேட்டர், வெல்டர், ஜூனியர் பிளானர், கேஸ் கட்டர், பெயிண்டர், பைப் பிட்டர், ஸ்டோர் கீப்பர், யூட்டிலிட்டி ஹேண்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவில் பணிகள் உள்ளன.

அதிகபட்சமாக பைப்பிட்டர் பணிக்கு 231 இடங்களும், ஸட்ரக்சரல் பேப்ரிகேட்டர் பணிக்கு 374 இடங்களும், கேஸ் கட்டர் பணிக்கு 100 இடங்களும், பிட்டர் பணிக்கு 254 இடங்களும், எலக்ட்ரானிக் மெக்கானிக் பணிக்கு 98 இடங்களும், கார்பெண்டர் பணிக்கு 78 இடங்களும் உள்ளன. அந்தந்த பணிக்கான முழுமையான காலியிட விவரத்தை இணையதளத்தில் பார்க்கலாம்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 1-8-2019ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 38 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி

8-ம் வகுப்பு தேர்ச்ச்சி, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, என்.ஏ.சி. பணிப்பயிற்சி சான்றிதழ் பெற்றவர்களுக்கு ஏராளமான பணியிடங்கள் உள்ளன.

கட்டணம்

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 5ந் தேதியாகும். இதற்கான ஆன்லைன் தேர்வு பற்றிய அறிவிப்பு செப்டம்பர் 23-ந் தேதி வெளியாகும் என்று உத்தேசமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் https://mazagondock.in/ என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.

மேலும் செய்திகள்