வானவில் : ஹூயாவெய் பேண்ட் 4

மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் முன்னணியில் திகழும் ஹூயாவெய் நிறுவனம் யு.எஸ்.பி. மூலம் சார்ஜ் செய்யும் வசதி கொண்ட ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.1,999 ஆகும்.;

Update:2020-02-05 18:07 IST
நீரில் 50 மீட்டர் ஆழம் வரையில் சென்றாலும் நீர் புகாத தன்மை கொண்டது. இது 0.96 அங்குல கலர் டிஸ்பிளேயை கொண்ட இதில் இதய துடிப்பை கணக்கிடும் வசதி உள்ளது. அத்துடன் ஆட்டோமேடிக் டிராக்கிங் வசதியும் கொண்டது.

இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 9 நாட்கள் வரை செயல்படும். இதில் தூக்கத்தை அளவிடும் வசதி உள்ளது. அத்துடன் தூக்கமின்மை குறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு 200 விதமான தீர்வுகளையும் இந்த கடிகாரம் அளிக்கும். அழைப்புகளை அடையாளம் காணுதல், நினைவூட்டல் உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டது.

இதில் அப்பல்லோ 3 பிராசஸர், ஆண்ட்ராய்டு 4.4 மற்றும் ஐ.ஓ.எஸ். 9.0 இயங்குதளம் உள்ளது. 9 வகையான உடற் பயிற்சி, நடைப் பயிற்சி உள்ளிட்டவற்றில் உங்கள் செயல்பாடு காரணமாக எரிக்கப்படும் கலோரி அளவை துல்லியமாகக் கணக்கிடும். உள்ளரங்க உடற்பயிற்சி, மைதானத்தில் மேற்கொள்ளும் பயிற்சி உள்ளிட்டவற்றிலும் உங்களின் செயல் திறனை இது அளவிடும். செல்போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் குறித்த விவரங்களை இது அளிக்கும். ஹூயாவெய் பேண்ட் 4 கடிகாரம் கருப்பு நிறத்தில் வந்துள்ளது.

மேலும் செய்திகள்