4 தினங்கள் தொடர் ஏற்றத்திற்குப் பின் சென்செக்ஸ் 164 புள்ளிகள் வீழ்ச்சி நிப்டி 40 புள்ளிகள் இறங்கியது

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 164 புள்ளிகள் வீழ்ந்தது.;

Update:2020-02-08 15:36 IST
மும்பை

4 தினங்கள் தொடர் ஏற்றத்திற்குப் பின், வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை அன்று பங்கு வர்த்தகம் சரிவைச் சந்தித்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 164 புள்ளிகள் வீழ்ந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 40 புள்ளிகள் இறங்கியது.

லாப நோக்கம்

தொடர்ந்து நான்கு தினங்கள் பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டிருந்த நிலையில் பல்வேறு நிறுவனப் பங்குகளின் விலையும் உயர்ந்து இருந்தது. எனவே லாபம் ஈட்டும் நோக்கத்துடன் பலரும் அதிக அளவில் பங்குகளை விற்பனை செய்தனர். சந்தைகள் சரிய அது முக்கியக் காரணமாக இருந்தது.

அந்த நிலையில், மும்பை பங்குச்சந்தையில் ரியல் எஸ்டேட் துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 1.93 சதவீதம் சரிந்தது. அடுத்து மோட்டார் வாகனத் துறை குறியீட்டு எண் 1.06 சதவீதம் குறைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனப் பங்குகளில் 11 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தது. 19 நிறுவனப் பங்குகளின் விலை

இந்தப் பட்டியலில் என்.டி.பி.சி., ஓ.என்.ஜி.சி., எச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஹீரோ மோட்டோகார்ப், ஆக்சிஸ் பேங்க், டைட்டான் உள்ளிட்ட 11 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தது. அதே சமயம் இண்டஸ் இந்த் பேங்க், மகிந்திரா அண்டு மகிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாட்டா ஸ்டீல், பார்தி ஏர்டெல் உள்பட 19 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 164.18 புள்ளிகள் சரிந்து 41,141.85 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 41,394.41 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 41,073.36 புள்ளிகளுக்கும் சென்றது.

இந்தச் சந்தையில் 1212 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1287 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும் இருந்தது. 172 நிறுவனப் பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ரூ.3,885 கோடியாக உயர்ந்தது. கடந்த வியாழக்கிழமை அன்று அது ரூ.3,196 கோடியாக இருந்தது.

நிப்டி

தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 39.60 புள்ளிகள் இறங்கி 12,098.35 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 12,154.70 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 12,073.95 புள்ளிகளுக்கும் சென்றது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மேலும் செய்திகள்