செபி நிறுவனத்தில் உதவி மேலாளர் பணிகள்

பங்கு வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் செபி நிறுவனத்தில் உதவி மேலாளர் பணியிடங்களுக்கு 147 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

Update: 2020-03-16 10:26 GMT
இந்திய பங்கு வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் அமைப்பாக ‘செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸேஞ்ச் போர்ட் ஆப் இந்தியா’ செயல்படுகிறது. சுருக்கமாக செபி (SEBI) என்று அழைக்கப்படும் இந்த நிறுவனத்தில் உதவி மேலாளர் (கிரேடு-ஏ) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 147 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள்.

பொது, சட்டம், ஐ.டி., பொறியியல், ஆராய்ச்சி, மொழி போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. இதில் அதிகபட்சமாக பொது பிரிவில் 80 இடங்களும், சட்டப் பிரிவில் 34 இடங்களும், ஐ.டி. பிரிவில் 22 இடங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 29-2-2020-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித் தகுதி

சி.ஏ., சி.எஸ்., சி.எப்.ஏ., சி.டபுள்யு.ஏ. மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பொது பிரிவு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். சட்டம், எம்.சி.ஏ., சிவில், எலக்ட்ரிக்கல், என் ஜினீயரிங் படித்தவர்கள் இவை சார்ந்த பிரிவு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவில் முதுநிலை படிப்பு படித்தவர்கள், மொழி மற்றும் ஆராய்ச்சி பிரிவு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும், மற்றவர்கள் ரூ.1000 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மார்ச் 23-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

இதற்கான முதல்நிலை ஆன்லைன் தேர்வு ஏப்ரல் 12-ந் தேதியும், இரண்டாம் நிலை ஆன்லைன் தேர்வு, மே 3-ந் தேதியும் நடத்தப்படுகிறது. நேர்காணல் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கவும், இது பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.sebi.gov.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.

மேலும் செய்திகள்