வானவில் :ஓரியன்ட் இன்வெர்ட்டர் ஏர் கூலர்

கோடைகாலம் தொடங்கிவிட்டது. இதில் நடுத்தர மக்களும் பயன்படுத்தும் விதமாக புதிய தொழில்நுட்பம் கொண்ட ஏர் கூலரை அறிமுகப்படுத்தியுள்ளது ஓரியன்ட்.

Update: 2020-03-18 10:08 GMT
ஏர் கூலரில் இன்வெர்ட்டர் உள்ளது. இதனால் இது மின்சாரத்தை சிக்கனமாக சேமிக்கும். இதன் ஆரம்ப விலை சுமார் ரூ.5,190. மின்னணு முறையில் செயல்படும் மோட்டார் (இ.சி.எம்.) இதில் உள்ளது.

இது மின்சாரத்தை 50 சதவீத அளவுக்கு சேமிக்க உதவுகிறது. இதில் உயர்ரக மாடலில் ஐ.ஓ.டி. தொழில்நுட்பமும் புகுத்தப்பட்டுள்ளது. இந்த மாடல்களை ஓரியன்ட் ஸ்மார்ட் மொபைல் செயலி மூலம் செயல்படுத்தலாம். இவை குரல் வழி கட்டுப்பாடு மூலமும் இயங்கும். இதனால் அமேசான் அலெக்ஸா மற்றும் கூகுள் அசிஸ்ட் மூலம் இதை செயல்படுத்தலாம். இவை வெவ்வேறு அளவுகளில் வந்துள்ளது.

ஆரம்ப நிலை 8 லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும். இதில் பெரிய அளவிலானது 105 லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும். இதில் தேன்கூடு வடிவிலான பில்டர்கள் டென்ஸ்நெட் தொழில்நுட்பம் கொண்டவை. இது வழக்கமான ஏர் கூலரை விட 25 சதவீதம் கூடுதல் குளிர்ச்சியை அளிக்கும்.

இதில் உள்ள பேன்கள் ஏரோபேன் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் குறைவான சப்தத்தில் அதிக அளவிலான காற்றை வெளிப்படுத்தக் கூடியது. இதற்கு தேவையான நீரை உறிஞ்சிக் கொள்ளும் ஆட்டோ பில் தொழில்நுட்பமும் இதில் உள்ளது. மேலும் கொசு முட்டையிடுவதைத் தடுக்கும் தொழில்நுட்பமும் இதில் உள்ளது. இதுபோன்ற இன்வெர்ட்டர் ஏர் கூலரை அனைவரும் பயன்படுத்துவதன் மூலம் மின்சாரம் சேமிக்கப்படும்.

மேலும் செய்திகள்