வியாழக்கிழமை வர்த்தகத்தில் பொறியியல் சாதனங்கள் துறை குறியீட்டு எண் அதிகபட்ச வீழ்ச்சி
மும்பை பங்குச்சந்தையில், வியாழக்கிழமை வர்த்தகத்தில் பொறியியல் சாதனங்கள் துறையைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.;
மும்பை
மும்பை பங்குச்சந்தையில், வியாழக்கிழமை வர்த்தகத்தில் பொறியியல் சாதனங்கள் துறையைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது. எனவே அந்த துறைக்கான குறியீட்டு எண் அதிகபட்சமாக 6.18 சதவீதம் வீழ்ச்சி கண்டது. வர்த்தகத்தின் இறுதியில் அந்த பங்குகளின் விலை நிலவரம் வருமாறு:-
* பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனப் பங்கு விலை 12.91 சதவீதம் குறைந்து ரூ.64.75-ஆக இருந்தது.
* எச்.இ.ஜி. பங்கின் விலை 12.08 சதவீதம் சரிந்து ரூ.542.35-க்கு கைமாறியது.
* பாரத் போர்ஜ் நிறுவனப் பங்கு விலை 11.98 சதவீதம் இறங்கி ரூ.304.85-ல் முடிவுற்றது.
* பினோலெக்ஸ் கேபிள்ஸ் பங்கின் விலை 9.94 சதவீதம் வீழ்ச்சி கண்டு ரூ.213.35-ல் நிலைபெற்றது.
* கிராபைட் இந்தியா நிறுவனப் பங்கு விலை 9.85 சதவீதம் சரிவடைந்து ரூ.130.90-ஆக இருந்தது.
* தெர்மாக்ஸ் பங்கின் விலை 9.80 சதவீதம் இறங்கி ரூ.666.50-ல் முடிவுற்றது.
* என்.பீ.சி.சி. நிறுவனப் பங்கு 9.62 சதவீதம் சரிந்து ரூ.15.50-க்கு விலைபோனது.
* ஹனிவெல் ஆட்டோமேட்டிக் இந்தியா பங்கு 7.84 சதவீதம் குறைந்து ரூ.24,784.55-ல் நிலை கொண்டது.
* கிரைன்டுவெல் நார்ட்டன் பங்கின் விலை 7.79 சதவீதம் இறங்கி ரூ.465-க்கு கைமாறியது.
* எல் அண்டு டி பங்கு 6.73 சதவீதம் சரிந்து ரூ.843.25-க்கு விலைபோனது.
* எஸ்.கே.எப். இந்தியா நிறுவனப் பங்கு விலை 6.50 சதவீதம் குறைந்து ரூ.1,559.80-ஆக இருந்தது.
* கல்பதரு பவர் டிரான்ஸ்மிஷன் பங்கு விலை 5.42 சதவீதம் வீழ்ந்து ரூ.206.10-ல் முடிவுற்றது.
* ஹேவல்ஸ் இந்தியா பங்கின் விலை 5.29 சதவீதம் இறங்கி ரூ.535.85-க்கு கைமாறியது.
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு