வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் எரிசக்தி துறை குறியீட்டு எண் அதிகபட்ச ஏற்றம்

மும்பை பங்குச்சந்தையில், வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் எரிசக்தி துறையைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது.;

Update:2020-03-21 16:06 IST
மும்பை

மும்பை பங்குச்சந்தையில், வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் எரிசக்தி துறையைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது. எனவே அந்த துறைக்கான குறியீட்டு எண் அதிகபட்சமாக 9.96 சதவீதம் ஏற்றம் கண்டது. வர்த்தகத்தின் இறுதியில் அந்த பங்குகளின் விலை நிலவரம் வருமாறு:-

* ஓ.என்.ஜி.சி. நிறுவனப் பங்கு விலை 18.58 சதவீதம் அதிகரித்து ரூ.72.45-ஆக இருந்தது.

* கான்பிடென்ஸ் பெட்ரோலியம் இந்தியா பங்கின் விலை 12.54 சதவீதம் உயர்ந்து ரூ.17.05-ல் நிலைகொண்டது.

* ரிலையன்ஸ் இண்டஸ்டரீஸ் நிறுவனப் பங்கு 11.24 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ.1020.20-க்கு விலைபோனது.

* பனாமா பெட்ரோகெம் கார்ப் பங்கு விலை 10.51 சதவீதம் முன்னேறி ரூ.34.70-ஆக இருந்தது.

* இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் பங்கின் விலை 9.73 சதவீதம் உயர்ந்து ரூ.209.25-ல் முடிவுற்றது.

* கல்ப் ஆயில் லூப்ரிக்கன்ட்ஸ் பங்கு விலை 8 சதவீதம் அதிகரித்து ரூ.556.20-ல் நிலைபெற்றது.

* ஆயில் இந்தியா நிறுவனப் பங்கின் விலை 7.38 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ.81.50-க்கு கைமாறியது.

* செலன் எக்ஸ்புலோரேஷன் டெக்னாலஜிஸ் பங்கின் விலை 7.26 சதவீதம் முன்னேறி ரூ.70.95-ல் முடிவுற்றது.

* கோல் இந்தியா நிறுவனப் பங்கு விலை 6.73 சதவீதம் அதிகரித்து ரூ.132.45-ல் நிலைகொண்டது.

* பீ.பி.சி.எல். நிறுவனப் பங்கின் விலை 6.08 சதவீதம் உயர்ந்து ரூ.318.50-ல் முடிவுற்றது.

* இந்துஸ்தான் ஆயில் எக்ஸ்புலோரேஷன் பங்கு விலை 5.83 சதவீதம் முன்னேறி ரூ.39-க்கு கைமாறியது.

* குஜராத் காஸ் நிறுவனப் பங்கின் விலை 5.29 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ.241.75-ஆக இருந்தது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மேலும் செய்திகள்