பாசில் ஜென் 5 இ ஸ்மார்ட் கடிகாரம்

உயர் ரக கைக்கடிகாரங்களில் பாசில் கடிகாரங்கள் முன்னிலை வகிப்பவை. தற்போது பாசில் ஜென் 5 இ என்ற பெயரிலான ஸ்மார்ட் கைக் கடிகாரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.;

Update:2021-02-11 20:53 IST
அழகிய வட்ட வடிவிலான 1.19 அங்குல அமோலெட் திரையைக் கொண்டதாக இது இருக்கும். குவால்காம் ஸ்நாப்டிராகன் பிராசஸர் உள்ளது. கையில் அணியும் பட்டியை மாற்றும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. விரைவாக சார்ஜ் ஆகும் தன்மை கொண்டது. இரண்டு அளவுகளில் அதாவது 42 மி.மீ. மற்றும் 44 மி.மீ. அளவுகளில் இது வந்துள்ளது. 1 ஜி.பி. ரேம், 4 ஜி.பி. நினைவகம் கொண்டது. நீர் புகா தன்மை கொண்டது. இதய துடிப்பை அளவிடுவது, நடப்பதில் எரிக்கப்படும் கலோரி அளவை கணக்கிடுவது உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது.

இதில் ஸ்பீக்கரும், மைக்ரோபோனும் உள்ளதால் ஸ்மார்ட்போனுக்கு வரும் அழைப்புகளுக்கு இதன் மூலம் பதில் அளிக்கலாம். கூகுள் அசிஸ்டென்ட் மூலமும் இதை செயல்படுத்தலாம். கருப்பு சிலிக்கான், பிரவுன் லெதர், கருப்பு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், இரட்டை வண்ண ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், ரோஸ் கோல்டு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வசதிகளைக் கொண்டது. இதன் விலை சுமார் ரூ.18,499.

மேலும் செய்திகள்