‘கருடா’ பெண்கள் படை

பயங்கரவாதத்துக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாக பெண்களை கொண்ட விசேஷ கமாண்டோ படை பிரிவை கர்நாடக அரசு உருவாக்கி உள்ளது.;

Update:2021-02-15 22:46 IST
இந்த கமாண்டோ படைக்கான பயிற்சியில் 16 இளம் பெண்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி, கயிறு மூலம் ஏறுதல், தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ளுதல், தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுதல், ஆயுதங்களை கையாளுதல் போன்ற கடுமையான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

பெங்களூருவில் உள்ள பயங்கரவாத தடுப்பு பயிற்சி மையத்தில் போலீஸ் அதிகாரி எம்.எல். மதுரா வீணா தலைமையில் இதற்கான பணி நடக்கிறது. கர்நாடக காவல் துறையில் கருடா என்ற கமாண்டோ பிரிவு 8 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. மன வலிமை, உடல் வலிமை கொண்ட போலீசாரை தேர்வு செய்து அவர்களுக்கு கமாண்டோ பயிற்சி அளிக்கிறார்கள். ஆண்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட இந்த பயிற்சி தற்போது பெண்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதுபற்றி மூத்த போலீஸ் அதிகாரி பாஸ்கர் ராவ் கூறுகையில், ‘‘எங்களிடம் 170 பெண் கமாண்டோக்கள் உள்ளனர். அவர்கள் தொடர்ந்து பயங்கரவாத நடவடிக்கைகளை சமாளிப்பது குறித்து பயிற்சி பெறுவார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் நாலைந்து பேருடன் சண்டையிடும் அளவுக்கு உடல்வலு கொண்டவர்களாக இருப்பார்கள்" என்றார்.

மேலும் செய்திகள்