கூட்டம் நிறைந்த இடங்களை கண்டறியும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது கூகுள் நிறுவனம்!

கூகுள் மேப்ஸை பயன்படுத்தும் பயனாளர்கள் இனிமேல் கூட்டம் நிறைந்த இடங்களை அறிந்து கொள்ளலாம்.

Update: 2021-11-17 16:10 GMT
புதுடெல்லி,

கூகுள் நிறுவனம் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, கூகுள் மேப்ஸை பயன்படுத்தும் பயனாளர்கள் இனிமேல் கூட்டம் நிறைந்த இடங்களை அறிந்து கொள்ளலாம். கூட்டம் நிறைந்த இடங்கள் குறித்த எச்சரிக்கையும் இதன்மூலம் தெரிவிக்கப்படும்.

இதன்மூலம், நாம் செல்ல இருக்கும் பகுதி, கூட்டத்தால் நிரம்பி உள்ளதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம். இதற்காக ஏரியா பிஸி எனும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் டைரக்டரிஸ் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒரு குறிப்பிட்ட ஷாப்பிங் மாலில் என்னென்ன கடைகள் மற்றும் இடங்கள் உள்ளன போன்ற விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும்.

இதுகுறித்த கூகுள் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது,

https://blog.google/products/maps/keep-it-chill-holiday-new-tools-google-maps/

இதுபோன்ற வசதிகள் மூலம், ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்கள் நிம்மதியாக பதட்டமின்றி  நீண்ட நேரம் தங்களது விருப்பம் போல செலவழிக்கலாம் என்று தெரிவிக்கப்படுள்ளது.

மேலும் செய்திகள்