சாக்லேட் சுவீட் கார்ன்

சமூக ஊடகங்களில் விசித்திரமான விஷயங்களுக்கு பஞ்சமில்லை. உணவு வகைகள் விதவிதமாக சமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படுகின்றன. அவற்றுள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வீடியோக்கள் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி விடுகின்றன. அந்த வகையில் ‘ஸ்வீட் கார்ன்’ எனப்படும் சோளக்கதிர் புது வடிவம் பெற்றிருக்கிறது.;

Update:2021-11-21 17:48 IST
வேகவைக்கப்பட்ட ஸ்வீட்கார்ன் மீது சிறிதளவு வெண்ணெய், உப்பு, மிளகாய் தூள் கலந்து ருசிக்கும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. டெல்லியில் சாலையோர கடைக்காரர் ஒருவர், ஸ்வீட் கார்னை கொண்டு வித்தியாசமான செய்முறையை உருவாக்கியுள்ளார். வேகவைத்த சோளக்கதிரை கையில் எடுக்கும் அவர், முதலில் அதன் மீது வெண்ணெய்யை தடவுகிறார். சோளக்கதிர்களின் அனைத்து பகுதிகளிலும் வெண்ணெய் பரவியதும் சாக்லேட் சிரப்பை ஊற்றுகிறார்.

அதைத்தொடர்ந்து கிரீமை தடவுகிறார். பின்பு சிறிதளவு உப்பையும், சில மசாலா பொருட்களையும் தூவுகிறார். இறுதியில் சிறிதளவு எலுமிச்சை சாற்றை கலந்து பேப்பர் தட்டில் வைக்கிறார். சோளக்கதிரில் தூவப்பட்டிருக்கும் மசாலா கலவை அனைத்து பகுதியிலும் பரவும்படி சுருட்டி கொடுக்கிறார். இந்த சாக்லேட் சுவீட் கார்ன் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏராளமான லைக்குகளும், கருத்துகளும் பதிவாகி இருக்கின்றன.

மேலும் செய்திகள்