‘நிப்ட்’ நிறுவனத்தில் வேலை

தேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிப்ட்) வளாக இயக்குநர், இயக்குனர், செயற்திட்ட பொறியாளர், செயற் பொறியாளர், கண்காணிப்பு அலுவலர், கணக்கு அலுவலர், உதவி இயக்குனர், உதவியாளர், நூலகர் உள்பட 136 காலி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.;

Update:2021-11-26 16:58 IST
சம்பந்தப்பட்ட துறை சார்ந்த பதவிகளுக்கு ஏற்ப பட்டப்படிப்பு, முதுகலைப்படிப்பு கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை பதிவாளர், நிப்ட் வளாகம், கவுஸ் காஸ், குல்மோஹர் பார்க் அருகில், புதுடெல்லி - 110016 என்ற முகவரிக்கு தபாலில் அனுப்ப வேண்டும்.

 விண்ணப்பிக்க கடைசி தேதி: 17-12-2021. வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை பற்றிய விரிவான விவரங்களை https://nift.ac.in/ என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.

மேலும் செய்திகள்