இந்தியாவில் பாலியல் ரீதியாக ஆண் பாதிக்கப்பட்டால்...! சட்டம் என்ன சொல்கிறது...?
கடந்த ஆண்டு நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 3,71,503 ஆகப் பதிவாகியுள்ளன.;
புதுடெல்லி
உலகில் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு மூலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடரத்தான் செய்கின்றன. நாளுக்கு நாள் பாலியல் துன்புறுத்தல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எந்த பிரச்சினை ஓய்ந்தாலும், பாலியல் துன்புறுத்தல் மட்டும் ஓயவில்லை.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாலியல் துன்புறுத்தல் பிரச்சினை நான்காவது இடத்தில் உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) பாலியல் குற்றங்களைக் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், இந்தியாவில் கணக்குப்படி ஒரு நாளுக்கு 77 பாலியல் வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு மட்டுமே 28,046 சம்பவங்கள் நடந்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, கடந்த ஆண்டு நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 3,71,503 ஆகப் பதிவாகியுள்ளன. முன்னதாக, 2019ம் ஆண்டில், 4,05,326 ஆகவும், 2018ம் ஆண்டில், 3,78,236 ஆக குறைவாக இருந்துள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது, கடந்த 2020 ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்களின் மொத்த 28,046 பதிவாகியுள்ளது. இதில், பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 28,153 பேர். மறுபக்கம் கரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஆண்டும் இது தான் எனக் குறிப்பிடத்தக்கது.
பாலியல் ரீதியாக ஆண் பாதிக்கப்பட்டால் ?
இந்தியச் சட்டங்களின்படி, ''ஆண்கள் பாலியல் பலத்த காரத்திற்கு ஆளாக மாட்டார்கள். இயற்கை மாறாக ஆண்கள் பாதிக்கப்பட்டால் ''இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 377வது இயற்கைக்கு மாறா பிரிவின் கீழ் மட்டுமே பதிவு செய்ய முடியும்.
கடந்த 2018 ஆம் ஆண்டு வரை, சட்டப்பிரிவு 377 சம்மதத்துடன் கூடிய ஓரினச்சேர்க்கையையும் குற்றமாக்கியது. அதேபோல, செப்டம்பர் 6 அன்று சுப்ரீம் கோர்ட் ஒரு வரலாற்றுத் தீர்ப்பில் சட்டத்தின் இந்த அம்சத்தை நிராகரித்தாலும், பாலியல் பலாத்காரத்திற்கான சட்ட வரையறைகளில் கூடுதல் திருத்தங்கள் தேவை எனக் குறிப்பிடப்படுகிறது.
இந்தப்பிரிவு 377ன் கீழ் அவர்கள் பாலியல் வன்கொடுமை அல்லது கட்டாய இயற்கைக்கு மாறான உறவு ஆகியவற்றிற்காகப் பதிவு செய்யப்படலாம். அதேபோல், ஆண்களை சட்டப்பூர்வமாக பாலியல் பாலத்காரம் செய்ய முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.