எல்.ஜி. அல்ட்ரா பைன் ஓலெட் புரோ மானிட்டர்

மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி. நிறுவனம் புதிதாக தொழில்முறை கலைஞர்களுக்கென ஓலெட் புரோ மானிட்டரை அறிமுகம் செய்துள்ளது.;

Update:2022-01-06 13:51 IST
டெஸ்க் டாப் மானிட்டர்களில் இது சிறப்பானது. வீடியோ எடிட்டிங் உள்ளிட்ட பணிகளை செய்வோருக்கு காட்சிகளின் வண்ண தன்மை துல்லியமாக தெரிய வேண்டும். அது இத்தகைய ஓலெட் திரையில் துல்லியமாகத் தெரியும். எனவே இது தொழில்முறைக் கலைஞர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

32 அங்குலம் மற்றும் 27 அங்குல அளவுகளில் இது வந்துள்ளது. இது 4-கே ரெசல்யூஷனைக் கொண்டது. மிகவும் மெல்லியதாகவும், எடை குறைவானதாகவும் இது உள்ளது. இதை எளிதில் நிறுவ முடியும். உயரத்துக்கேற்ப அட்ஜெஸ்ட் செய்ய முடியும்.

மேலும் செய்திகள்